ADDED : ஆக 03, 2011 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் : இந்தி தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கடலூர் தஷ்ண பாரத இந்தி பிரசார சபா சார்பில் ஒரு நாள் நேர்முகத் தேர்வு நடந்தது.
இந்த மாதம் நடைபெறவுள்ள இந்தி தேர்வில் பிராத்மிக் முதல் பிரவீண் வரை தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு கடலூர் தஷ்ண பாரத இந்தி பிரசார சபா சார்பில் ஒரு நாள் நேர்முகத் தேர்வு கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமை மாநில முதல் உபத் தலைவர் அருணாசலம் துவக்கி வைத்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு 40க்கும் மேற்பட்ட இந்தி பண்டிட்கள் பயிற்சி அளித்தனர்.

