sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலத்தின் தடுப்புச் சுவர் இடிந்ததால் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்

/

பாலத்தின் தடுப்புச் சுவர் இடிந்ததால் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்

பாலத்தின் தடுப்புச் சுவர் இடிந்ததால் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்

பாலத்தின் தடுப்புச் சுவர் இடிந்ததால் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்


ADDED : ஆக 03, 2011 01:50 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு புதிய பாலம் பலவீனம் அடைந்ததால் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

சென்னை - கும்பகோணம் சாலையில் உள்ள சேத்தியாத்தோப்பில் போக்குவரத்து வசதிக்காக கட்டப்பட்ட பாலத்தை கடந்த 95ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஜெ., திறந்து வைத்தார். 15 ஆண்டுகள் கடந்த நிலையில் பாலத்தை பாதுகாக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை மிகுந்த அலட்சியத்தோடு செயல்பட்டதால் இரண்டு இடங்களில் மெகா சைஸ் உடைப்பு ஏற்பட்டது. இதனை தினமலர் இதழில் படத்துடன் செய்தி வெளியான பின் தார் ஊற்றி உடைப்பை மறைத்து வைத்தனர். இந்நிலையில் அள்ளூர் கிராமத்தின் எல்லையில் உள்ள மேற்கு பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த பின் பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் மேலும் பலவீனம் அடைந்து வருகிறது. தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த பின் அப்பகுதியை நெடுஞ்சாலைத் துறையினர் இது வரை பார்வையிடக் கூட முன் வரவில்லை. மேலும் தற்போது இடிந்து விழுந்த தடுப்புச் சுவரின் எதிரில் உள்ள கீழ்பகுதி தடுப்புச்சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். சென்னை - கும்பகோணம் சாலையில் இருந்த அணைக்கரை பாலம் பழுதாகி 3 ஆண்டுகளாக போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில் தற்போது சேத்தியாத்தோப்பு பாலத்தில் போக்குவரத்து 50 சதவீதம் குறைந்துள்ளது. இப்போது தடுப்புச் சுவர் இடிந்துள்ள நிலையில் நெடுஞ் சாலைத்துறை தொடர்ந்து அலட்சிய போக்கில் செயல்படுமானால் பாலத்தில் போக்குவரத்து முழுவதும் தடைபடக் கூடும்.






      Dinamalar
      Follow us