/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.கே.பொறியியல் கல்லூரியில் "எக்னிடெஸ்' துவக்க விழா
/
சி.கே.பொறியியல் கல்லூரியில் "எக்னிடெஸ்' துவக்க விழா
சி.கே.பொறியியல் கல்லூரியில் "எக்னிடெஸ்' துவக்க விழா
சி.கே.பொறியியல் கல்லூரியில் "எக்னிடெஸ்' துவக்க விழா
ADDED : ஆக 05, 2011 03:16 AM
கடலூர் : கடலூர் சி.கே.பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும்
மின்னணுவியல் துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பின் 'எக்னிடெஸ்' துவக்க விழா
நடந்தது.கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
துறைத் தலைவர்
கமலக் கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தர்மல்-2ன் தலைமை மேலாளர்
ஜான்சன் ஜெபராஜ் பேசினார். மேலாண்மை துறைத் தலைவர் ஆனந்த், சிறப்பு அலுவலர்
ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மாணவர் கூட்டமைப்புத் தலைவர் வினோத்
குமார், துணைத் தலைவர் லட்சுமணன் கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து
பேசினர். விழாவில் துறைத் தலைவர்கள் சீனிவாசன், சசிக்குமார், ஷாஜகான் உட்பட
பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், ஈஸ்வரன்
ஆகியோர் செய்திருந்தனர்.கூட்டமைப்பு செயலர் கிருஷ்ணப் பிரியா நன்றி
கூறினார்.