sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விபத்தில் சிக்கிய லாரியை அகற்றாததால் மக்கள் அவதி

/

விபத்தில் சிக்கிய லாரியை அகற்றாததால் மக்கள் அவதி

விபத்தில் சிக்கிய லாரியை அகற்றாததால் மக்கள் அவதி

விபத்தில் சிக்கிய லாரியை அகற்றாததால் மக்கள் அவதி


ADDED : ஆக 20, 2011 02:55 AM

Google News

ADDED : ஆக 20, 2011 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்:சேலம் - விருத்தாசலம் மாற்று வழிச்சாலையில் விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தாததால், வாகனங்கள் 20 கி.மீ., தூரம் சுற்றிச் செல்கின்றன.

இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சேலம் - விருத்தாசலம் சாலையில் வேப்பூர் தேசிய நேடுஞ்சாலையில் இருந்து மாவட்ட எல்லையான அரசங்குடி வரை, 8 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கம் செய்து சீரமைக்கப்படுகிறது. இப்பணி மந்தமாக நடக்கிறது.இந்நிலையில் வேப்பூர் அடுத்த அடரி என்ற இடத்தில், பழைய பாலத்தினை அகற்றி புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக போக்குவரத்து தடையில்லாமல் இருக்க பாலம் உடைக்கப்பட்ட இடத்தில் தற்காலிகப் பாதை அமைக்கப்பட்டது.கடந்த 18ம் தேதி, அதிகாலை 5 மணிக்கு முந்தைய நாள் பெய்த கன மழையால், மோசமான சாலையில் கன்டெய்னர் லாரி சிக்கியதால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சேலம், ஈரோடு, ராசிபுரம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம் செல்லும் நான்கு மாவட்ட பயணிகள், போக்குவரத்து உள்ளிட்ட வாகனங்கள் மங்களூர், பாசாறு, விநாயகனந்தல், ம.புடையூர் கிராமங்களைச் சுற்றிக் கொண்டு 20 கி.மீ., கூடுதலாக செல்கிறது.இரண்டு நாட்களாகியும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியத்தால் லாரி அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால் வெளி மாவட்ட பயணிகள் இவ்வழியாகச் செல்லும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் இரண்டு நாட்களாக கடும் அவதியடைந்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us