/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முடசல் ஓடை முகத்துவாரம்அடைப்பால் மீனவர்கள் அவதி
/
முடசல் ஓடை முகத்துவாரம்அடைப்பால் மீனவர்கள் அவதி
ADDED : செப் 04, 2011 01:59 AM
கிள்ளை:முடசல் ஓடை முகத்துவாரம் அடைந்ததால் அப்பகுதி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
சிதம்பரம் அடுத்த முடசல் ஓடை முகத்துவாரம் வழியாக 85க்கும் மேற்பட்ட
விசைப்படகு மூலம் அப்பகுதி மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
தற்போது ஆற்றில் இருந்து கடலுக்குச் செல்லும் முகத்துவாரம் மணல் தூர்ந்து
அடைப்பு ஏற்பட்டுள்ளதால் முடசல் ஓடை, சூரியா நகர், கூழையார் பகுதியைச்
சேர்ந்த விசைப்படகு உரிமையார்கள் மற்றும் சங்கத்தினர்கள் கடலுக்கு மீன்
பிடிக்கச் செல்ல முடியாமல் முகத்துவாரம் வரை சென்று கடலுக்குள் செல்ல
முடியாமல் திரும்பி வந்தனர்.அதிகாரிகள் பார்வையிட்டு தூர்ந்துள்ள
முகத்துவாரத்தை தற்காலிகமாக வெட்டி ஆழப்படுத்த வேண்டும் என மீனவர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.