நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி:குமாரையில் நடந்த பச்சையம்மன் கோவில் தேர் மற்றும் தீமிதி
திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திட்டக்குடி
அடுத்த குமாரை கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம்
துவங்கியது.தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழா நிறைவாக தேர் திருவிழாவும்
தொடர்ந்து தீமிதி திருவிழாவும் நடந்தது.தேர் திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு
சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. பின் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய
வீதிகள் வழியாக திருத்தேரில் வலம் வந்தது.மாலை நடந்த தீமிதி திருவிழாவில்
பொதுமக்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.