sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.1 லட்சம் மின் ஒயர் திருட்டு: நால்வருக்கு ஒரு ஆண்டு சிறை

/

ரூ.1 லட்சம் மின் ஒயர் திருட்டு: நால்வருக்கு ஒரு ஆண்டு சிறை

ரூ.1 லட்சம் மின் ஒயர் திருட்டு: நால்வருக்கு ஒரு ஆண்டு சிறை

ரூ.1 லட்சம் மின் ஒயர் திருட்டு: நால்வருக்கு ஒரு ஆண்டு சிறை


ADDED : செப் 08, 2011 03:47 AM

Google News

ADDED : செப் 08, 2011 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:பல்வேறு இடங்களில் மின் ஒயர் திருடிய நான்கு பேருக்கு கடலூர் கோர்ட்டில் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை, மந்திப்பாளையம், பூண்டி, கட்டமுத்துப்பாளையம், பணப்பாக்கம், கொளப்பாக்கம், சித்திரைச்சாவடி, கடாம்புலியூர் உட்பட 14 இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் 2008ம் ஆண்டு முதல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலுமினியம், காப்பர் ஒயர்கள் திருடுபோயின.புதுப்பேட்டை போலீசார் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் வடலூர் அடுத்த இந்திராநகர் சிவா 28, பார்வதிபுரம் அந்தோணிராஜன் 37, வள்ளலார் நகர் கருணாகரன் 28, ஆண்டார்கொல்லை இளங்கோவன் 26 என்பதும், புதுப்பேட்டை பகுதியில் 12 இடங்களிலும், காடாம்புலியூர் பகுதியில் இரண்டு இடங்களிலும் டிரான்ஸ்பார்மரில் மின் ஒயர்களை திருடியது தெரியவந்தது.இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சிவா உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து கடலூர் செஷசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி உத்திராபதி, குற்றவாளிகள் சிவா, ஆந்தோணிராஜன், கருணாகரன், இளங்கேவன் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா 25 ஆயிரத்து 561 ரூபாய் அபராதமும் விதித்தார்.






      Dinamalar
      Follow us