ADDED : செப் 08, 2011 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:வேப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது தொடர்பாக இரு
தரப்பினரிடையே நடந்த மோதல் வழக்கில் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த வேப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது தொடர்பாக
இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 21 பேர் படுகாயமடைந்து
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த மோதல் தொடர்பாக இரு
தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் தனித்தனியே வழக்குப்
பதிந்து இரு தரப்பையும் சேர்ந்த தண்டபாணி, 30, காமராஜ், 27, குமார், 35,
பாலசுப்ரமணியன், 45, மாயவன், 39, சுப்ரமணியன், 21, பரமசிவம், 32, ரமேஷ்,
30, கார்த்திக், 24, குமார், 25, பாண்டுரங்கன், 35, சுப்ரமணியன், 27,
உட்பட 16 பேரை கைது செய்தனர்.

