sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை முயற்சி வழக்கு: இருவருக்கு 7 ஆண்டு சிறை

/

கொலை முயற்சி வழக்கு: இருவருக்கு 7 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கு: இருவருக்கு 7 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கு: இருவருக்கு 7 ஆண்டு சிறை


ADDED : செப் 08, 2011 03:50 AM

Google News

ADDED : செப் 08, 2011 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு கடலூர் கோர்ட் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.நெல்லிக்குப்பம் அடுத்த கோண்டூர் பனங்காட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் சேட்டு, அஞ்சாபுலி. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் அஞ்சாபுலிக்கு வீடு ஒதுக்கவில்லை.தனக்கு வீடு ஒதுக்காததற்கு சேட்டு தான் காரணம் என

நினைத்த அஞ்சாபுலி அவரிடம் தகராறு செய்தார்.

இதில் ஆத்திரமடைந்த அஞ்சாபுலியின் மகன்கள் புரு÷ஷாத்தமன், 21, பூபாலன், 24 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன், 27, சதீஷ், 24, அறிவழகன், 25 ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதி கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சேட்டுவின் ஆதரவாளர்களான மணிகண்டன், துளசிதாஸ், ஏழுமலை ஆகியோரைத் தாக்கினர். இதில் மூவரும் படுகாயமடைந்தனர்.இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் புரு÷ஷாத்தமன், பூபாலன், மதியழகன், சதீஷ், அறிவழகன் ஆகியோரை கைது செய்து, கடலூர் முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் உதவி அமர்வு நீதிமன்றத்தில் கொலை முயற்சி வழக்குத் தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாதன், குற்றவாளிகள் மதியழகன், சதீஷ் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதமும், அறிவழகனுக்கு ஒரு ஆண்டு சிறையும், 500 ரூபாய் அபராதமும், புரு÷ஷாத்தமன், பூபாலனுக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தார். அரசு தரப்பில் பாலசங்கர் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us