நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி:நெய்வேலி டி.எஸ்.பி.,க்கு பிரிவு உபசார விழா நடந்தது.நெய்வேலியில்
கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த டி.எஸ்.பி., மணி சென்னைக்கு இடமாற்றம்
செய்யப்பட்டார்.
அதனையொட்டி நெய்வேலி லிக்னைட் இல்லத்தில் அவருக்கு பிரிவு
உபசார விழா நடந்தது.இன்ஸ்பெக்டர் சேகர் தலைமை தாங்கினார். டவுன்ஷிப்
இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர்கள் சுந்தரவடிவேல்,
ஜவஹர்லால், கண்ணதாசன் உள்ளிட்ட நெய்வேலி சரகத்திற்குட்பட்ட அனைத்து
இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள், வக்கீல்கள், வர்த்தக சங்க
பிரமுகர்கள் பங்கேற்றனர்.