/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பி.எஸ்.என்.எல்., தொழிலாளர்கூட்டணி உண்ணாவிரதம்
/
பி.எஸ்.என்.எல்., தொழிலாளர்கூட்டணி உண்ணாவிரதம்
ADDED : செப் 14, 2011 12:12 AM
கடலூர்:கடலூரில், பி.எஸ்.என்.எல்., தொழிலாளர் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை
வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.ரத்து செய்யப்பட்ட எல்.டி.சி.,
மற்றும் மெடிக்கல் சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்., தொழிலாளர் கூட்டணி சார்பில்
நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
கடலூர் பி.எஸ்.என். எல்., பொது
மேலாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் மாவட்டச் செயலர் சுந்தரமூர்த்தி
வரவேற்றார். மாநில துணைத் தலைவர் தமிழ்மணி துவக்க
உரையாற்றினார்.வெற்றிவேல், மஞ்சினி, இளங்கோவன், அரிகிருஷ்ணன், சுப்ரமணியன்,
ரத்தினம், வேலாயுதம், விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அகில
இந்திய செயலர் ஜெயராமன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.உதவிச் செயலர்
ஆனந்தன் நன்றி கூறினார்.