sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மிக்சி, கிரைண்டர், மின்விசிறி: கலெக்டர் அமுதவல்லி பார்வை

/

மிக்சி, கிரைண்டர், மின்விசிறி: கலெக்டர் அமுதவல்லி பார்வை

மிக்சி, கிரைண்டர், மின்விசிறி: கலெக்டர் அமுதவல்லி பார்வை

மிக்சி, கிரைண்டர், மின்விசிறி: கலெக்டர் அமுதவல்லி பார்வை


ADDED : செப் 16, 2011 12:20 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு திட்டத்தில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படவுள்ள பொருட்களை கலெக்டர் அமுதவல்லி நேற்று பார்வையிட்டார்.முதல்வர் சிறப்பு திட்டத்தின் கீழ் இன்று கடலூர் மாவட்டத்தில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்படவுள்ளது.இதற்காக கடலூர் முதுநகர் அருகே ஏணிக்காரன் தோட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சார்பு கலெக்டர் கிரண்குராலா, சிறப்பு திட்ட செயலாக்க துணை கலெக்டர் காமராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.பின்னர் கலெக்டர் அமுதவல்லி நிருபர்களிடம் கூறியதாவது:கடலூர் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் இன்று கடலூர் அடுத்த நாகப்பனூர் கிராமத்தில் துவக்க விழா நடக்கிறது.

இதில் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத், சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி பேசுகின்றனர். இந்த விழாவில் எம்.எல்.ஏ., எம்.பி.,க் கள் பங்கேற்கின்றனர்.

மாலை 3 மணிக்கு அழகியநத்தம் கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு கறவை மாடு வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு துவக்கி வைக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு கடலூர் சேவை இல்லத்தில் பள்ளி மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us