sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள்மறுவாழ்வு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

/

இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள்மறுவாழ்வு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள்மறுவாழ்வு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள்மறுவாழ்வு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 16, 2011 12:23 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்து இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளி வந்தவர்கள் மற்றும் உடல், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வழிவகை செய்யும் பொருட்டு, சிறுவணிகம் செய்து, மறுவாழ்வு பெற நிதியுதவியாக அதிகபட்சம் ஒரு பயனாளிக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற கீழக்கணும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.இனக் கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாத வகையில் ஊனமுற்றிருந்தால் அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெருங்குற்றங்களாக கருதப்படும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாதவராகவும், முதன் முறையாக சிறு குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து மீண்டவராக இருத்தல் வேண்டும்.உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவராய் இருப்பின் மாவட்ட அரசு மருத்துவரிடம் பரிசோதித்து அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பாக தாசில்தாரிடமிருந்து பொருள் இழப்பீட்டுச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.இந்திய தண்டனைச் சட்டம் விதிகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் செய்திருப்போர் மற்றும் தண்டனைகள் பெற்றிருப்போரின் ஆண்டு வருமானம் நகர்ப் புறங்களில் 36 ஆயிரத்திற்கு மிகாமலும், கிராமப்புறங்களில் 24 ஆயிரத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.சிறுதண்டனை அனுபவித்து மறுவாழ்வு நிதி கோருபவராக இருந்தால் தடை செய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பின் உறுப்பினராகவோ, முனைப்பான பங்கேற்பாளராகவோ இல்லாமல் இருத்தல் வேண்டும்.வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்கள் இழப்பின் அளவினை குறிப்பிட்டு அதற்கான சான்றாவணங்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்திற்குரிய சான்றாவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us