/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு துவங்கியது
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு துவங்கியது
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு துவங்கியது
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு துவங்கியது
ADDED : செப் 17, 2011 01:01 AM
கடலூர் : கடலூர் மாவட்ட தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு கடலூர் புதுப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.மாவட்ட கல்வி அலுவலர் பூபதி முன்னிலையில் நடந்த கலந்தாய்வில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு ஒன்றியம் வாரியாக கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
400க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இன்று முற்பகல் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் பணி புரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல், தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.பிற்பகல் தரம் உயர்ந்தப்பட்ட நடுநிலைப் பள்ளியில் 6, 7, 8 வகுப்புகளில் பணிபுரியும் உயர்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 19ம் தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்ளும், பிற்பகல் ஒன்றியம் விட்டு ஒன்றியம், பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் நடக்கிறது. 20ம் தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் அந்தந்த கலந்தாய்வு மையங்களில் நடைபெறும்.ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கலந்தாய்வு மையம் எதிரில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலந்தாய்விற்கு முன்னரே பல்வேறு மாவட்டங்களில் மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்துவிட்டு, கலந்தாய்வின் மூலம் ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.செயலர் கோபாலகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினார். 100க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.