/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
/
சேத்தியாத்தோப்பில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : செப் 18, 2011 09:31 PM
சேத்தியாத்தோப்பு:புவனகிரி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் அண்ணா துரை பிறந்த
நாள் பொதுக் கூட்டம் சேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்தில் நடந்தது.
ஒன்றிய செயலர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி தலைவர்
ஸ்ரீதர், நகர துணைச் செயலர் முருகன், புவனகிரி நகர செயலர் செல்வகுமார்
முன்னிலை வகித்தனர். சேத்தியாத்தோப்பு நகர கழக செயலர் இளஞ்செழியன்
வரவேற்றார். முன்னாள் ஒன்றிய சேர்மன் லட்சுமிநாராயணன் துவக்க
உரையாற்றினார்.
புவனகிரி தொகுதி மாஜி எம்.எல்., அருள், தலைமை கழக பேச்சாளர் புரட்சிவாணன்,
முன்னாள் கதர்வாரிய உறுப்பினர் தனஜெயராமன், மாவட்ட இணைச் செயலர்
செஞ்சிலட்சுமி, ஒன்றிய தலைவர் முத்து கனகராஜ், நகர நிர்வாகிகள் மணிகண்டன்,
ஜபருல்லா, முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயராமன் உட்பட பலர் பேசினர். ஒன்றிய
பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.