/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவந்திபுரத்தில் புரட்டாசி மாத தரிசனம்
/
திருவந்திபுரத்தில் புரட்டாசி மாத தரிசனம்
ADDED : செப் 19, 2011 12:04 AM
கடலூர்:திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், புரட்டாசி முதல் நாளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், புரட்டாசி முதல் நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூலவர் தேவநாத பெருமாள் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் மொட்டையடித்து, காது குத்தி, மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை நீலமேக பட்டாச்சாரியார், நரசிம்மன், வெங்கடகிருஷ்ணன் பட்டர் மற்றும் நிர்வாகி அதிகாரி வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.