sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனு தாக்கல் செய்யும் இடங்களில் குடிநீரின்றி கட்சியினர் அவதி

/

மனு தாக்கல் செய்யும் இடங்களில் குடிநீரின்றி கட்சியினர் அவதி

மனு தாக்கல் செய்யும் இடங்களில் குடிநீரின்றி கட்சியினர் அவதி

மனு தாக்கல் செய்யும் இடங்களில் குடிநீரின்றி கட்சியினர் அவதி


ADDED : செப் 27, 2011 11:26 PM

Google News

ADDED : செப் 27, 2011 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : கடலூரில் உள்ளாட்சித் தேர்தலுக்கு மனு பெறும் மையங்களில் குடிநீர் வசதி செய்யப்படாததால் அரசியல் கட்சியினர் கடும் அவதியடைந்தனர்.தற்போது அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - வி.சி., போன்ற கட்சிகள் தனித்தும், தே.மு.தி.க., - கம்யூ., கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.பிரதான கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணக்கை அதிகரித்துள்ளது.

இதனால் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய நாள்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. தினம் 500க்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.மனு தாக்கல் செய்ய வருபவர்கள் ஒரு மணி நேரம் வரை அங்கு இருக்க வேண்டியுள்ள நிலையில் குடிக்க தண்ணீரின்றி அவதிப்படும் நிலை உள்ளது.நகருக்கே குடிநீர் விநியோகம் செய்யும் நகராட்சி நிர்வாகம் மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யாததால் குடிநீர் கிடைக்காமல் அரசியல் கட்சியினர் தவியாய் தவித்தனர்.இதேப்போன்று கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக இருந்தது. இங்கும் குடிநீர் வசதி செய்யபடவில்லை.








      Dinamalar
      Follow us