sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்ற முயற்சி: பொதுமக்கள் போராட்டம்

/

உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்ற முயற்சி: பொதுமக்கள் போராட்டம்

உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்ற முயற்சி: பொதுமக்கள் போராட்டம்

உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்ற முயற்சி: பொதுமக்கள் போராட்டம்


ADDED : அக் 05, 2011 12:43 AM

Google News

ADDED : அக் 05, 2011 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : ராமநத்தத்தில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை தொழுதூருக்கு மாற்றக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராமநத்தத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தை தொழுதூருக்கு மாற்ற மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையறிந்த பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., ஒன்றிய பேரவை விஜய மகேந்திரன், தி.மு.க., ஒன்றிய துணை செயலர் ராணி ஜெயக்குமார், தி.மு.க., செயலர் ராமு, தே.மு.தி.க., நிர்வாகி ராமசாமி உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் ராமநத்தத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தை தொழுதூருக்கு மாற்றக் கூடாது என கோரி உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன் திரண்டனர். அலுவலகம் மாற்றப்படுவதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் இந்த முடிவினை கைவிடக் கோரி போராட்டம் நடத்தினர்.தகவலறிந்த ராமநத்தம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பேச்சவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர். அதனைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் குமரேசன், உதவி பொறியாளர் இளஞ்செழியன் ஆகியோர் மொபைல் போன் மூலம் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.








      Dinamalar
      Follow us