/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் துவக்கம்! விடுபட்ட வார்டுகளில் குழாய் பதிக்கும் பணி தீவிரம்
/
கடலுாரில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் துவக்கம்! விடுபட்ட வார்டுகளில் குழாய் பதிக்கும் பணி தீவிரம்
கடலுாரில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் துவக்கம்! விடுபட்ட வார்டுகளில் குழாய் பதிக்கும் பணி தீவிரம்
கடலுாரில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் துவக்கம்! விடுபட்ட வார்டுகளில் குழாய் பதிக்கும் பணி தீவிரம்
UPDATED : ஜூன் 24, 2025 07:59 AM
ADDED : ஜூன் 24, 2025 07:46 AM

கடலுார்: கடலுார் மாநகரில் 2ம் கட்ட பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
கடலுார் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு 2 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளில் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுநீருடன் கலந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
மேலும் கொசுத்தொல்லை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர நகராட்சியாக இருக்கும் போதே பாதாள திட்டத்தை நிறைவேற்ற முன் வந்தது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண 65 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தை 2 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 33 வார்டுகளில் முழுமையாகவும், 3 வார்டுகளில் பகுதியாகவும் நிறைவேற்றப்பட்டது. இதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தேவனாம்பட்டிணத்தில் செயல்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் 200 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போல் அல்லாமல் அதிகளவு இயந்திரங்களை பயன்படுத்தி குழி தோண்டி உடனடியாக பைப்புகள், புதைக்கப்படுகின்றன.
புதிய பாதாள சாக்கடைத் திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 34 வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களுக்கு இணைப்பு வழங்க முடியும். நாளொன்றுக்கு ஒரு கோடியே 20 லட்சம் கழிவுநீரை சுத்திகரிக்க முடியும். கடலுார் மாநகரில் வைப்புத் தொகை செலுத்தி பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுவரை 3 ஆயிரத்திற்கும் குறைவான இணைப்புகள் மட்டுமே பெற்றுள்ளனர்.
இதனால் அனைவருக்கும் தவணை முறையில் கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை இணைப்புகளை பெறுவதற்கு கட்டடத்தின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் உரிமையாளரின் ஒப்புதலுடன் கமிஷனருக்கு விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் செலுத்தி விண்ணப்ப படிவம் 1ல் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் விற்பனைப் பத்திர நகல், சொத்து வரி செலுத்திய ரசீது நகல் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையடுத்து மாநகர பொறியாளர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி விண்ணப்பத்தை பரிசீலித்து இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.