sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் உட்பட 27 பேர் கைது 42 கிலோ பறிமுதல்; கடலுார் போலீசார் அதிரடி

/

கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் உட்பட 27 பேர் கைது 42 கிலோ பறிமுதல்; கடலுார் போலீசார் அதிரடி

கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் உட்பட 27 பேர் கைது 42 கிலோ பறிமுதல்; கடலுார் போலீசார் அதிரடி

கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் உட்பட 27 பேர் கைது 42 கிலோ பறிமுதல்; கடலுார் போலீசார் அதிரடி


ADDED : அக் 06, 2025 02:00 AM

Google News

ADDED : அக் 06, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா வாலிபர் உட்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒடிசாவில் இருந்து கடலுார் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கதிரவன், சப் இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வம், ஆனந்தகுமார், பிரசன்னா ஆகியோர் அடங்கிய தனிப்படையும், பண்ருட்டி டி.எஸ்.பி.,ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், முருகன் மற்றும் போலீசார் அடங்கிய மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டன.

டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையிலான தனிப்படை நேற்று முன்தினம் இரவு வெளிச்செம்மண்டலம் கஸ்டம்ஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற கடலுார், பச்சையாங்குப்பம் வெங்கடேசன் மகன் துளசிதாஸ்,24; எஸ்.என்.சாவடி இளங்கோ மகன் தங்கபாண்டி,30; கூத்தப்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி மகன் நாராயணன்,26; அங்குசெட்டிப்பாளையம் ரகுகுமார் மகன் கிருஷ்ணசாமி,22; திருவாமூர் கோவிந்தன் மகன் கோகுலகிருஷ்ணன்,22; விருத்தாசலம் ஜெயராஜ் மகன் அப்பு,25; உட்ப ட 12 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில், கடலுார் பகுதியில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிந்தது. இவர்களை புதுநகர் போலீசார் கைது செய்து, 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

டி.எஸ்.பி., ராஜா தலைமையிலான போலீசார், சிலம்பிநாதன் பேட்டை அருகில் முந்திரிதோப்பில் பதுங்கியிருந்த ஒடிசாவை சேர்ந்த பிரதாப் சுவைன்,34; திட்டக்குடி வைத்தீஸ்வரன்,20; புலிகரம்பலுார் ராஜ்குமார்,35, வேப்பூர், அடரி திருஞானம் மகன் அருண்குமார்,23; உட்பட 15 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டனர். இவர்களை நடுவீரப்பட்டு போலீசார் கைது செய்து, 20 கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் கஞ்சா கடத்திய 27 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா வழக்கில் 290 பேர் கைது

இதுகுறித்து எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், 'ஒடிசா மாநிலம், கஞ்ஜம் மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 27 பேரை போலீசார் கைது செய்து, 3 பைக்குகள், 17 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

மாவட்டத்தில் இதுவரை 107 கஞ்சா வழக்குகள் கஞ்சா பதிவு செய்யப்பட்டு, 290 பேர் கைதாகினர். இவர்களிடம் இருந்து 197 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகினர் என்றார்.






      Dinamalar
      Follow us