/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளலார் மன்றத்தில் சிறப்பு வழிபாடு
/
வள்ளலார் மன்றத்தில் சிறப்பு வழிபாடு
ADDED : அக் 06, 2025 02:00 AM

கடலுார்: கடலுார் பீச்ரோடு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் (ஜோதி வழிபாடு நிலையம்) வள்ளலார் அவதார தின விழா நடந்தது.
சன்மார்க்க சத்திய சங்க தலைவர் சிவநேசன், பொருளாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சபாபதி வரவேற்றார். காலை தியானம், அகவல் உணர்ந்து ஓததல், இன்னிசை கச்சேரி நடந்தது. தொடர்ந் து யோகாசன பயிற்சி மற்றும் இயற்கை உணவு குறித்து குணசேகரன் விளக்கினார். புதுச்சேரி மாநில சமரச சுத்த சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோதண்டபாணி சொற்பொழிவு ஆற்றினார்.
மதியம் சிறப்பு வழிபாடு நடந்தது. துணைத் தலைவர் ராஜவேல், சிறப்பு அன்னதானத்தை துவக்கி வைத்தார். அரசுக்கல்லுாரி உதவி பேராசிரியர் ராசா சொற்பொழிவாற்றினார். சக்திதாசன் குழுவினரின் இன்னிசை கச்சேரி, ஸ்ரீசாய் நடன வித்யாலயா விஜயலட்சுமி குழுவினர் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
செயற்குழு ஜனார்த்தனன் நன்றி கூறினார்.