/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் இரண்டாவது நாளாக வெயில் சதம்
/
கடலுாரில் இரண்டாவது நாளாக வெயில் சதம்
ADDED : ஜூன் 20, 2025 12:50 AM
கடலுார்: கடலுாரில் நேற்றுமுன்தினம் வெயில் 100டிகிரியை கடந்த நிலையில், நேற்றும் 100 டிகிரி வெயில் பதிவாகி இரண்டாம் நாளாக சதமடித்தது.
கடலுார் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக வெப்பம் அதிகரித்தபடியே உள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று முன்தினம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் இரண்டு நாட்கள் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக நேற்றுமுன்தினம் 100.4 டிகிரி வெயில் வீசியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் நேற்றும் 100.9 டிகிரி வெயில் பதிவானது. தொடர்ந்து சில நாட்களாகவே வெயில் அதிகரித்தபடியே உள்ளதால் பொதுமக்கள்அவதியடைந்தனர். சாலையில் வெப்பக்காற்று வீசியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.