/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராவல் குவாரிக்கு தற்காலிக தடை கடலுார் ஆர்.டி.ஓ., அதிரடி
/
கிராவல் குவாரிக்கு தற்காலிக தடை கடலுார் ஆர்.டி.ஓ., அதிரடி
கிராவல் குவாரிக்கு தற்காலிக தடை கடலுார் ஆர்.டி.ஓ., அதிரடி
கிராவல் குவாரிக்கு தற்காலிக தடை கடலுார் ஆர்.டி.ஓ., அதிரடி
ADDED : ஆக 01, 2025 02:38 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் கிராவல் குவாரியில் ஆர்.டி.ஓ., அபிநயா ஆய்வு செய்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம்-சிலம்பிநாதன்பேட்டை செல்லும் சாலையில் கிராவல் குவாரிகள் செயல்படுகிறது. இங்கு, விதிமுறைகளை மீறி கிராவல் எடுக்கப்படுகிறது.
இதனால், மழைநீர் தேங்கி கரை உடைப்பு ஏற்பட்டால் பெரிய அளவிலான சேதம் ஏற்படும் நிலை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.
அதன்பேரில், ஆர்.டி.ஓ.,அபிநயா, லதா என்பவரின் குவாரியை ஆய்வு செய்ததில், விதிமுறைகளை மீறி கிராவல் எடுத்தது தெரிந்தது.
இதனால், குவாரியை தற்காலிகமாக இயங்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் சர்வேயர்கள் மூலமாக இடத்தை அளவீடு செய்து அறிக்கை வழங்க உத்திரவிட்டார்.
வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்து ஆர்.டி.ஓ.,அபிநயாவிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதுசம்மந்தமாக ஆர்.டி.ஓ.,வின் விரிவான அறிக்கை மாவட்ட நிர்வாத்திற்கு சமர்பித்து நடவடிக்கை எடுக்கப்டும், என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.