ADDED : ஆக 01, 2025 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: பூதங்குடி வீரனார் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி வீரனார் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்துசாந்தி, முதல் கால யாக பூஜை, மாலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, அனுக்ஞை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
நேற்று காலை கோபூஜை, தனபூஜை, பூர்ணாகுதி தீபாராதனையும், யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.