ADDED : டிச 03, 2025 06:10 AM

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி, குயின்ஸ் காமன்வெல்த் கட்டுரைப்போட்டியில் வெண்கல விருதைவென்று சாதனை படைத்தார்.
கடந்த, 1883 முதல் லண்டனில் உள்ள ராயல் காமன்வெல்த் சங்கத்தால்ஆண்டுதோறும், உலகின் பழமையான சர்வதேச எழுத்துப் போட்டியான குயின்ஸ் காமன்வெல்த் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டியில், கடலுாரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 மாணவி சுப்ரியா பங்கேற்றார்.
அவர் வெண்கல விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தாண்டு போட்டிக்கான கருப்பொருள், எங்கள் காமன்வெல்த் பயணம். இதுகாமன்வெல்த்திற்குள் புவியியல், வரலாறு அல்லது தனிப்பட்ட பயணங்களைப் பற்றி சிந்திக்க மாணவர்களை ஊக்குவிக்கிறது. இந்த ஆண்டு,போட்டிக்கு உலகம் முழுவதிலுமிருந்து 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்தன.
நடுவர் குழுவிற்கு புக்கர் பரிசு பெற்ற புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் சர் பென் ஓக்ரி தலைமை தாங்கினார். சீனியர் பிரிவில் போட்டியிட்ட சுப்ரியா,எழுத்துத் திறன் மற்றும் சிந்தனைமிக்க வெளிப்பாட்டிற்காக வெண்கல விருதைப் பெற்றார்.
விருதை வென்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் நடராஜன், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சுப்ரியாவை கவுரவித்தார். விழாவில்ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸ்டினா புளோரன்ஸ், அனிலா ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

