/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளியில் மழை நீர் தேக்கம் மாணவர்கள் கடும் அவதி
/
பள்ளியில் மழை நீர் தேக்கம் மாணவர்கள் கடும் அவதி
ADDED : டிச 03, 2025 06:11 AM

புதுச்சத்திரம்: அரசுப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேக்கத்திற்கு தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது.
ஆண்டார்முள்ளிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 47 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'டிட்வா ' புயல் காரணமாக, கடந்த சில தினங்களாக, பெய்த தொடர் மழை காரணமாக, பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் மாணவர்கள் பள்ளியின் உள்ளே சென்றுவர பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் அபாயம் ஏற் பட்டுள்ளது.
அதனால், பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், மழை காலங்களில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல், தவிர்க்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

