/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய சப் ஜூனியர் கபடி போட்டி கடலுார் மாணவிக்கு வெண்கலம்
/
தேசிய சப் ஜூனியர் கபடி போட்டி கடலுார் மாணவிக்கு வெண்கலம்
தேசிய சப் ஜூனியர் கபடி போட்டி கடலுார் மாணவிக்கு வெண்கலம்
தேசிய சப் ஜூனியர் கபடி போட்டி கடலுார் மாணவிக்கு வெண்கலம்
ADDED : மே 14, 2025 11:36 PM

கடலுார்: பீகாரில் நடந்த தேசிய சப் ஜூனியர் கபடி போட்டியில், வெண்கல பதக்கம் வென்ற மாணவியை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.
கடலுார் உண்ணாமலை செட்டி சாவடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், முன்னாள் கபடி வீரர். இவரது மகள் அனுபிரியா,15, கடலுார் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார்.
இவர் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை பீகார் மாநிலம், கயாவில் நடந்த தேசிய சப் ஜூனியர் கபடி போட்டியில் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டு பங்கேற்று விளையாடினார்.
அதில் தமிழக அணி வெண்கலம் பதக்கம் வென்றது. வெண்கல பதக்கம் வென்ற மாணவி அனுபிரியாவுக்கு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடந்தது.
கடலுார் மாவட்டத்திலுள்ள சீனியர் வீரர்கள், மாணவி அனுபிரியாவை பாராட்டினர்.
எஸ்.பி., ஜெயக்குமார், மாணவி அனுபிரியாவை நேரில் அழைத்துப் பாராட்டினார். அனுப்பிரியா கடலுார் நத்தப்பட்டில் உள்ள ஜெய்வீரா ஸ்போர்ட்ஸ் அகாடமியில், பயிற்சியாளர் ஜவகர் விவேக்கிடம் பயிற்சி பெற்று வருகிறார்.