/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தற்காப்புக்கலையில் சிறந்த வீரர்களை உருவாக்கும் கடலுார் டைகர் இன்டர்நேஷனல் தற்காப்புக்கலை பயிலகம்
/
தற்காப்புக்கலையில் சிறந்த வீரர்களை உருவாக்கும் கடலுார் டைகர் இன்டர்நேஷனல் தற்காப்புக்கலை பயிலகம்
தற்காப்புக்கலையில் சிறந்த வீரர்களை உருவாக்கும் கடலுார் டைகர் இன்டர்நேஷனல் தற்காப்புக்கலை பயிலகம்
தற்காப்புக்கலையில் சிறந்த வீரர்களை உருவாக்கும் கடலுார் டைகர் இன்டர்நேஷனல் தற்காப்புக்கலை பயிலகம்
ADDED : ஜூன் 04, 2025 09:39 PM

கடலுார்; கடலுார் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில், டைகர் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்ற தற்காப்புக்கலை பயிற்சி மையம் உள்ளது. இங்கு தற்காப்புக் கலைகளான வில்வித்தை, டேக்வான்டோ, சிலம்பம், யோகா, ஜூடோ மற்றும் பழங்கால ஆயுத கலைகளும் கற்றுத்தரப்படுகிறது. கடலுார் புதுப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், இதன் பயிற்சியாளராக உள்ளார். தற்காப்புக்கலைகள் பயிற்சி அளிப்பதில் 35ஆண்டுகள் அனுபவம் மிக்க இவர் தற்காப்புக்கலையில் சிறந்த வீரர்களை உருவாக்கியுள்ளார். 1999ம் ஆண்டு முதல் 2007 வரை ஆந்திர மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் தற்காப்புக்கலை பயிற்சியாளராக சிறந்த வீரர்களை உருவாக்கினார்.
இவரிடம் பயிற்சி பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த விவேக் தேஜா,27, டேக்வான்டோ கலையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை பெற்றதுடன், தற்போது முன்னணி பயிற்சியாளராகவும் உருவெடுத்துள்ளார். மதுரையைச் சேர்ந்த சந்திரபாபு, டேக்வான்டோ கலையில் கேரளா அணிக்காகவும், திருநெல்வேலியைச் சேர்ந்த செல்வநேசன் சென்னை பல்கலைக்கழக அணிக்காகவும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். 2023ம் ஆண்டில் தமிழ்நாடு யூத் பீல்டு ஆர்ச்சரி அசோஷியேஷன் சார்பில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதை, சென்னையில் நடந்த விழாவில் பெற்றார்.
டைகர் இன்டர்நேஷனல் தற்காப்புக்கலை பயிலகத்தில், தற்போது வில்வித்தை போட்டிகளிலும் சிறந்த வீரர்களை உருவாக்கி வருகின்றனர். ஈரோட்டில் 2023ம் ஆண்டிலும், ஏற்காட்டில் 2024ம் ஆண்டிலும், கோவாவில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் டைகர் இன்டர்நேஷனல் அகாடமி மாணவர்கள் பங்கேற்று சாம்பியன்ஷிப்பை வென்றனர். மேலும் மாநில அளவில் பல்வேறு நிலைகளில் தற்காப்புக்கலை போட்டிகளில் வெற்றிபெற்று பதக்கங்களை குவித்துள்ளனர்.
தொடர்நது தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை குவித்து வரும் டைகர் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் சுரேஷ்குமார் கூறியதாவது, தற்காப்புக்கலைகளின் தாயகமான இந்தியாவில் இருந்தே அனைத்துக்கலைகளும் வெவ்வெறு வடிவங்களில் பல்வேறு நாடுகளில் தற்போது பயிற்றுவிக்கப்படுகிறது. சிலம்பம், வில்வித்தை போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலையை கற்றுக்கொள்வதில் இளைய தலைமுறையினரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் மற்றும் பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் , இந்திய பள்ளி விளையாட்டுக்கூட்டமைப்பு நடத்தும் போட்டிகளில் வில்வித்தையையும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச போட்டிகளில் நமது வீரர்கள் சாதனை படைக்க உதவியாக இருக்கும் என்றார்.