ADDED : செப் 01, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலாசார தின விழா நடந்தது.
வீனஸ் குழும பள்ளி நிறுவனர் குமார் தலைமை தாங்கினார், தாளாளர் ரூபியால் ராணி, நிர்வாக இயக்குனர் அருண், தலைவர் லியோனா முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண் டாக்டர் வாசுதேவன், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் கலை, அறிவியல், விளையாட்டு, மாணவர்களின் தனி ஒழுக்கம் குறித்து பேசினார்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் பரம்பரியமான பல்வேறு கலாசாரம் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடினர்.
ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் பொனிகலா செய்திருந்தனர்.
மாணவி கவிமுகில் நன்றி கூறினார்.