/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஸ்டம்ஸ் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்
/
கஸ்டம்ஸ் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்
ADDED : டிச 08, 2024 04:59 AM

நெல்லிக்குப்பம் : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கஸ்டம்ஸ் சாலை சீரமைக்கும் பணி நடந்தது.
கடலுாரில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வரை பெண்ணையாற்றின் கரையோரம் கஸ்டம்ஸ் சாலை உள்ளது. கடலுாரில்இருந்து பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
பெஞ்சல் புயல், கன மழை காரணமாக பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் கரையை உடைத்து கொண்டு கஸ்டம்ஸ் சாலை மூழ்கியதுடன், மேல்பட்டாம்பாக்கம் அருகே 500 மீட்டர் துாரத்திற்கு சாலை நீரில்அடித்து சென்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது, தண்ணீர் வடிந்து விட்டதால் ஆற்றின் கரையோரம் மணல் மூட்டைகளை அடுக்கி சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.