/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நோட்டீஸ்
/
சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நோட்டீஸ்
ADDED : ஜன 20, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், ஆற்றுத் திருவிழாவில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
கடலுார் மாவட்ட தென்பெண்ணை ஆற்றில் நேற்று ஆற்றுத் திருவிழா நடந்தது. இதில், மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சைபர் கிரைம் தொடர்பாக பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், மொபைல் போன் பயன்பாடு குறித்தும், குழந்தைகளுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி நோட்டீஸ் வழங்கினர்.