ADDED : பிப் 20, 2024 02:52 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், மாணவர்களுக்கு வழங்க சைக்கிள் கோர்ப்பு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில், அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்க, சத்திஸ்கர் மாநிலத்தில் இருந்து உதிரி பாகங்கள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஒருவாரமாக சைக்கிள் கோர்ப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோர்க்கப்பட்ட சைக்கிள்கள் லாரிகள் மூலம் அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

