/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜன., 4ல் சைக்கிள் போட்டி; கடலுார் கலெக்டர் அழைப்பு
/
ஜன., 4ல் சைக்கிள் போட்டி; கடலுார் கலெக்டர் அழைப்பு
ஜன., 4ல் சைக்கிள் போட்டி; கடலுார் கலெக்டர் அழைப்பு
ஜன., 4ல் சைக்கிள் போட்டி; கடலுார் கலெக்டர் அழைப்பு
ADDED : ஜன 02, 2025 06:39 AM
கடலுார்; கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், வரும் 4ம் தேதி அண்ணா விரைவு சைக்கிள் போட்டியில் பங்கேற்க கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, ஆண்டு தோறும் சைக்கிள் போட்டி நடத்தி, பரிசு வழங்கப்படுகிறது. இந்து ஆண்டு, ஜன., 4ம் தேதி நடத்தப்படுகிறது. கடலுார் அக் ஷரா வித்யாஸ்ரமம் மெட்ரிக் பள்ளியில் இருந்து காலை 7:00 மணிக்கு போட்டி நடக்கிறது.
அனைத்து பிரிவுகளுக்கும் முதல் பரிசு ரூ. 5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 2ஆயிரம் மற்றும் நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் வரை தலா ரூ. 250 வழங்கப்படும். 13, 15, 17வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
பங்கேற்கும் போட்டியாளர்கள் வயது சான்றுக்கு பள்ளி தலைமை ஆசிரியரிடம் அல்லது பிறப்பு சான்றிதழ், வங்கி கணக்கு பாஸ் புத்தகம் நகல் கொண்டு வரவேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாதாரண சைக்கிளை (இரண்டு பிரேக்குகள், சாதாரண ஹேண்ட் பார்) கொண்டு வரவேண்டும்.
நுழைவு படிவத்தை மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கொண்டு வரவேண்டும். போட்டிகளில் பங்கேற்க போட்டி துவங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர், போட்டி நடக்கும் இடத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் நாளை 3ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.