/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார், புதுச்சேரியில் 2ம் எண் புயல் கூண்டு
/
கடலுார், புதுச்சேரியில் 2ம் எண் புயல் கூண்டு
ADDED : அக் 28, 2025 06:19 AM

கடலுார்: 'மோந்தா' புயல் காரணமாக, கடலுார், புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் 'மோந்தா' புயல் உருவானது.
சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கில் 520 கி.மீ., தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து, தென்கிழக்கு திசையிலும் புயல் நிலை கொண்டுள்ளது.
இது தீவிர புயலாக உருவாகி இன்று ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 90-100 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் உருவாகியுள்ளதை குறிக்கும் வகையில் கடலுார் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

