/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடுப்பணை சேதம்: சீரமைக்க கோரிக்கை
/
தடுப்பணை சேதம்: சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 19, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம், ; சிறுபாக்கம் அருகே சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிறுபாக்கம் அடுத்த மா.குடிகாடு பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், விவசாய திறந்த வெளி கிணற்றில் நீர் மட்டம் உயரவும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வனத்துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டது.
இந்நிலையில், தடுப்பணை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் இல்லாததால், தடுப்பணையின் மதகுகள், கரைகள் சேதமடைந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் தேக்க முடியாமல் வீணாகிறது.
எனவே, மா.குடிகாடு கிராமத்தில் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.