நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அருகே மழை காரணமாக கூரை வீட்டின் சுவர் இடிந்து சேதமடைந்தது.
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிர புயலாக மாறி, மழை பெய்து வருகிறது. திட்டக்குடி அடுத்த கூடலுார் காலனியைச் சேர்ந்த அசோக்குமார், 45; என்வரது கூரை வீட்டின் சுவர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. உயிர் சேதம் எதுவுமில்லை.
தகவலறிந்த திட்டக்குடி தாசில்தார் அந்தோணிராஜ், வி.ஏ.ஓ., சிவக்குமார் ஆகியோர் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர். ஆவினங்குடி போலீசார் விசாரித்தனர்.

