/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரதுார் சாலை சேதம்: விவசாயிகள் அவதி
/
பரதுார் சாலை சேதம்: விவசாயிகள் அவதி
ADDED : ஆக 08, 2025 02:24 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் ஊராட்சியில் வயல்வெளி சாலை ஜல்லிகள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரதுார் ஊராட்சியில் வயல்வெளி செம்மண் சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சாலையை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான இருபொருட்களை கொண்டு செல்ல பயன் படுத்தி வருகின்றனர்.
சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லேசான மழை பெய்தாலே சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.
இதனால், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

