/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிழற்குடை இருக்கைகள் சேதம் விருத்தாசலத்தில் அவலம்
/
நிழற்குடை இருக்கைகள் சேதம் விருத்தாசலத்தில் அவலம்
ADDED : பிப் 20, 2024 03:00 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்த நிழற்குடையில் சேதமடைந்த இருக்கைகளை சீரமைக்க வேண்டும்.
விருத்தாசலம் பாலக்கரை வழியாக கடலுார், நெய்வேலி, புவனகிரி, கும்பகோணம், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, சேலம் மார்க்கமாக நுாற்றுக்கணக்கான பஸ்கள் செல்கின்றன. இங்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய சிதம்பரம் எம்.பி., பொன்னுசாமி தொகுதி நிதியின் கீழ் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்குடை கட்டப்பட்டது.பயணிகள் பயனடைந்த நிலையில், அங்கிருந்த இரும்பு இருக்கைகள் பெயர்ந்து காட்சிப் பொருளாக கிடக்கின்றன. இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால், சுகாதார சீர்கேடாக நிழற்குடை மாறியுள்ளது.
இதனால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் நிழற்குடையை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து, சுவரொட்டிகள் ஒட்டாத வகையில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்திருந்தது. நாளடைவில் பராமரிப்பின்றி வீணாகி வருவதால், பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
எனவே, விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

