/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவியலால் ஆபத்து
/
தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவியலால் ஆபத்து
ADDED : அக் 31, 2025 02:23 AM

விருத்தாசலம்:  பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவிந்து, மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக சிதம்பரம், புவனகிரி, நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ், லாரி, வேன் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையை, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதில், விருத்தாசலம் நகரில் பூந்தோட்டம் பகுதியில் மணல் குவிந்து, மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் இடதுபுறமாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இது குறித்து பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பூந்தோட்டம் பகுதியில் குவிந்துள்ள மணலை அகற்றி, மழைநீரை அப்புறப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

