ADDED : நவ 17, 2025 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: மின்கம்பங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புவனகிரி பகுதியில் மின் வயரில் மரக்கிளைகள் மற்றும் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. குறிப்பாக ஆதிவராக நல்லுாரில் உள்ள சில பகுதியில் மின் கசிவினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து மின்துறையினர் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த பகுதிகளில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்குள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

