/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செம்மண் லாரிகளால் நடுவீரப்பட்டில் விபத்து அபாயம்
/
செம்மண் லாரிகளால் நடுவீரப்பட்டில் விபத்து அபாயம்
ADDED : அக் 29, 2024 07:02 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பகுதியில் செம்மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் போட்டி போட்டு வேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம் ஊராட்சிகளில் செம்மண் குவாரிகள் உள்ளது. இந்த குவாரிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் வந்து செம்மண் ஏற்றி செல்கின்றன.
நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதியில் உள்ள செம்மண் குவாரிக்கு செல்லும் வழியில் பள்ளிகள், மருத்துவமனை உள்ளதால் காலை நேரத்தில் மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் லாரிகள் அதிவேகமாகவும், ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு டிரைவர்கள் மொபைல் பேசிக்கொண்டும் லாரிகள் ஓட்டிச் செலகின்றனர்.
இதனால் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
மேலும் மேல் பகுதியை மூடாமல் செல்வதால் லாரியிலிருந்து செம்மண் சாலையில் விழுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம், மாணவர்கள் பள்ளி நேரத்தில் செம்மண் குவாரியிலிருந்து லாரிகள் மண் ஏற்றி வருவதை நிறுத்தவும், மெதுவாக செல்லவும், மண்ணை மூடி எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.