/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்
ADDED : மார் 29, 2025 04:37 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் காலனி தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் ஊராட்சி காலனி தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க கட்டப்பட்டுள்ளது.
நீர்த்தேக்க தொட்டியில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து தண்ணீர் வழிந்தோடுகிறது. ஒரு துாணில் சிமென்ட் காரைகள் முற்றிலும் பெயர்ந்து எப்போது, வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெயரளவில் மட்டுமே நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்பட்டது.
எனவே, பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன் நீர்த்தேக்க தொட்டியை நிரந்தரமாக சீரமைக்க அதகிாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.