/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்
ADDED : ஜூலை 03, 2025 11:21 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ் பாதி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்த்தில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் மூலமாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த தொட்டி பழுது ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக இதன் அருகில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பழைய தொட்டியில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து துாண்கள் வலுவிழுந்து எப்போது, வேண்டுமானலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அருகில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளும், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.