/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் சில்வர் பீச்சில் ஆபத்தான குளியல்: தடுக்க நடவடிக்க தேவை
/
கடலுார் சில்வர் பீச்சில் ஆபத்தான குளியல்: தடுக்க நடவடிக்க தேவை
கடலுார் சில்வர் பீச்சில் ஆபத்தான குளியல்: தடுக்க நடவடிக்க தேவை
கடலுார் சில்வர் பீச்சில் ஆபத்தான குளியல்: தடுக்க நடவடிக்க தேவை
ADDED : அக் 03, 2024 11:22 PM

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிறுவர்களுடன் ஆபத்தை உணராமல் குளிப்பதால், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்து, கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய பொழுதுபோக்கு இடமாக உள்ளது.
மிக அழகான நீளமான கடற்கரை என பெயர் பெற்ற இங்கு, வார இறுதி நாட்கள், மாலை வேளைகள், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் குடும்பமாக வந்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்த பீச்சில் தினந்தோறும் கடல் உள்வாங்கியும், திடீரென அதிக சீற்றங்களுடன் அலைகள் ஆர்ப்பரிப்பதும் உள்ளது. இதனால், கடலில் குளித்த பலர் உயிரிழந்த சம்பவம் நடந்ததால், கடலில் குளிக்க தடை விதித்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அதையும் மீறி, கடலின் ஆழம் பற்றி அறியாமல் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும்
சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். சிறுவர்களுடன் குளிப்பதால், இதனால், சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, சில்வர் பீச்சில் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு, கடலில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் குளிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

