ADDED : மே 03, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த கள்ளையன்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் கவுசல்யா,23; அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., வேதியியல் இறுதியாண் படித்து வந்தார். நேற்று முன்தினம் அய்யநதுார் அரசு கொள்முதல் நிலையம் அருகில் பிரபாகரன் தனது நெல்லை கொட்டி இருந்தார். நெல் குவியலை காவல் காக்குமாறு கவுசல்யாவை விட்டு விட்டு, பிரபாகரன் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, கவுசல்யா காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.