ADDED : செப் 14, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகள் ஜெயப்பிரியா, 32; ஜெய்சங்கர் தனது குடும்பத்துடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது, வீட்டில் இருந்த ஜெயப்பிரியா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து ஜெயப்பிரியாவை தேடி வருகின்றனர்.