ADDED : ஆக 18, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; இறந்தவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டு அரவிந்தர் கண் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளத்தைச் சேர்ந்தவர் செல்வராசு மனைவி கனகம்,76; இவர், கடந்த 16ம் தேதி இறந்தார். ரத்த கொடையாளர்களான, இவரது மகன் முருகன், உறவினர் சிவக்குமார் ஆகியோர் அனுமதியுடன், சிதம்பரம் ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில் மூதாட்டியின் கண்களை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் தானமாக பெற்றுச் சென்றனர்.
கீழ் புவனகிரி, சுண்ணாம்புகார தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மனைவி மல்லிகா, 65; இவர், கடந்த 16ம் தேதி இறந்தார். இவரது கண்களை புவனகிரி அரிமா சங்க நிர்வாகி ரத்தின சுப்பிரமணியன் ஏற்பாட்டில் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் தானமாக பெற்றுச் சென்றனர்.