/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற கால அவகாசம்
/
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற கால அவகாசம்
ADDED : டிச 08, 2024 05:22 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகர பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, இருபுறமும் மழைநீர் வடிகால் கட்டப்பட்டது. சில பகுதியில் சாலை மிகவும் குறுகியதாக இருந்ததால், இந்த வடிகால் மீது சிலாப் போடப்பட்டு பொதுமக்கள் மக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைத்து தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது.
ஆனால் நடைபாதையை வியாபாரிகள் முழுதுமாக ஆக்கிரமிப்பு செய்து கடைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.
இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில், கடந்த மாதம் ஆக்கிரமிப்பாளர்களே தங்கள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இடித்து அகற்றுவோம் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்த வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
இந்நிலையில், நகர வர்த்தகர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் மணிவண்ணன் முதல்வரின் தனிபிரிவில், வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மழைக் காலம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாமென கோரியிருந்தார். அதைதொடர்ந்து கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி ஆக்கிரமிப்பு அகற்றுவதை ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.