/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீபாவளிக்கு முன்பு அகவிலைப்படி; ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை

ADDED : அக் 07, 2025 12:35 AM
கடலுார்: தீபாவளிக்கு முன்பு தமிழக அரசு அகவிலைப்படி வழங்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சஙகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட பிரசார செயலாளர் சிங்காரம் விடுத்துள்ள அறிக்கை: மத்திய அரசு பணியாளர்களுக்கு ஜூலை 1 முதல் 3 சதவீத அகவிலைப்படியை ரொக்கமாக வழங்கி உள்ளது.
அதே போன்று, மாநில அரசு பணியாளர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படியை முன் தேதியிட்டு ரொக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்க வேண்டும்.
மேலும் கடந்த ஏப்., 1ம் தேதிக்கு பிறகு பணியமர்த்தப்பட்டுள்ள அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வு பெற்ற அனைவருக்கும் 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.