sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை; ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்

/

மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை; ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்

மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை; ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்

மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை; ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்


ADDED : அக் 07, 2025 12:34 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு மொபைல் போன் வெளிச்சத்தில் பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆர ம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 5 டாக்டர்கள், 5 செவிலியர்கள், 2 உதவியாளர்கள் உள்ளனர். சுகாதார நிலையத்தில் 7 படுக்கைகள் கொண்ட கர்ப்பிணி வார்டுகள் உள்ளன.

இங்கு, 100க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். சுகாதார நிலையத்தில் புறநோயாளி பரிசோதனை பகுதிக்கு 1 இன்வெர்ட்டரும, கர்ப்பிணி வார்டுக்கு 1 இன்வெர்ட்டர் மற்றும் ஜெனரேட்டர் வசதி உள்ளன.

அதில், இரு இன்வெர்ட்டரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழுதானது. இதுவரை சீரமைக்கவில்லை. நேற்று காலை 10:00 மணிக்கு பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏ.பி., சுவிட்ச் பழுதானது.

அதனை மாற்றியமைக்க மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், சுகாதார நிலையத்தில் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை மின்தடை ஏற்பட்டது.

அப்போது, சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த டாக்டர்கள், நோயாளிகளுக்கு மொபைல் போன் வெளிச்சத்தில் பரிசோதனை செய்து, ஊசி செலுத்தினர். இதனால், நோயாளிகள் அவதி யடைந்தனர்.






      Dinamalar
      Follow us